Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Linking Aadhaar number is mandatory for people in this scheme! Government announcement!

Linking Aadhaar number is mandatory for people in this scheme! Government announcement!

இந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சமூக நலத் துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரே வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது.மேலும் அந்த வைப்பு நிதிக்கான ஆவணங்கள் அனைத்தும் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் விதிகள் படி திட்டப்பயனாளிகளின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள் ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால் ஆதார் எண் பெறப்படாத நிலையில் ஆதாருக்கு பெற்றோர் மூலம் விண்ணப்பிக்கலாம்.அந்த சான்றிதழை கொண்டு இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஆதாருக்கு விண்ணப்பித்து இன்னும் வரவில்லை என்றால் ஆதார் விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் பெறுவதற்கான விண்ணப்ப நகல் இணைக்க வேண்டும்.அதுமட்டுமின்றி புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை,ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக்கு கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைத்து விண்ணப்பித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version