இந்த ஆவணத்துடனும் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம்?
ஆதார் என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி வருகின்றது. அந்த வகையில் ஆதாரை பான் கார்டு, மின் இணைப்பு, வங்கி கணக்கு போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் அனைத்து மின் நுகர்வோரும் அவரவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது.
அது மட்டுமின்றி மத்திய அரசின் அறிவிப்பின்படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். இல்லையெனில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்காளரும் தங்களது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் இந்த பணியை கடந்த 2021 இல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசமானது மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிறைவடைகிறது. இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனே அனைத்து வாக்காளர்கள் அவரவர்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.