Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடை செய்யப்பட்ட பகுதியில் சிங்கம்! வீம்பு செய்த இளைஞர்!

Lion in the restricted area! The proud young man!

Lion in the restricted area! The proud young man!

தடை செய்யப்பட்ட பகுதியில் சிங்கம்! வீம்பு செய்த இளைஞர்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பல சுற்றுலா தளங்கள் உள்ளது. மேலும் அங்கு நேரு உயிரியல் பூங்கா ஒன்றும் உள்ளது. இங்கு ஆப்பிரிக்கா சிங்கம் இருந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து இருந்தனர். அப்போது அங்கே சுற்றித்திரிந்த முப்பத்தி ஒரு வயது நபர் நேற்று பிற்பகல் பூங்கா ஊழியர்களால் மீட்கப்பட்டார்.

நேரு உயிரியல் பூங்கா அதிகாரிகள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அவர் மீது ஒரு புகாரும் அளித்துள்ளனர். அந்த நபர் ஜி. சாய்குமார் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அங்கிருந்த கேமராவின் மூலம் பதிவாகி உள்ளன. அந்த வீடியோ காட்சிகளில் அந்த நபர் தடை செய்யப்பட்ட பூங்காவின் சில பகுதிகளில் வேண்டுமென்றே நடந்து சென்றார்.

அந்த பகுதியில் ஒரு ஆப்பிரிக்க சிங்கம் இருந்தது. அங்கு சென்று அந்த நபர் பாறைகளில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று குனிந்து சிங்கத்திடம் சைகை செய்து அதை சீண்டி கோபமடைய செய்கிறார். இதை பார்த்த பார்வையாளர்கள் அந்த நபரை பார்த்ததும் கூச்சலிட்டனர். மேலும் அவரை கவனமாக இருக்கச் சொல்லியும், உதவிக்கு ஆட்களை அழைப்பதும் அந்த வீடியோக்களில் பதிவாகியிருந்தன.

இந்த வேலை எல்லாம் தேவையா? சுற்றி பார்க்க போனோமா? வந்தோமா? என்று இல்லாமல் எதற்கு இந்த வேலை. அதன் பின் சிங்கம் என்னை இப்படி செய்தது. அப்படி செய்தது. என்று குறை கூறுவது.

இது குறித்து பூங்கா சார்பாக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தது. ஜி சாய் குமார், பார்வையாளர்களுக்கு தடைசெய்யப்பட்ட சிங்கம் இருக்கும்  பகுதிக்குள் குதித்து, பாறாங்கற்களுக்கு மேல் நடந்து சென்று உள்ளார்.   அந்த நபரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் மீட்டு பகதூர்புரா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் என்று அதில் இருந்தது.

https://twitter.com/i/status/1463129696342732802

Exit mobile version