பெங்களூரு: தற்போது கர்நாடகாவில் அரசு மதுபானங்களின் மீதான கலால் வரி பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளின் விலை உயரும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே கலால் வரி உயர்த்தி பீர் விலையை மட்டும் அதிகரிக்க கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விலையானது வருகிற 20 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை முதல் விலை உயர்வு அமல்படுத்த உள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதன்படி ஒரு பீர்க்கு ரூ 10 முதல் 40 வரை விலை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் சில பீர்களின் விலை மட்டுமே உயர்த்தப்படுவதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. இந்த விலை உயரும் பீர்கள் பழைய மற்றும் புதிய விலைகள் பின்வருமாறு. இந்த விலை உயர்வின் படி
- லெஜண்ட் ரூ.145 (பழைய விலை-ரூ.100).
- பவர் கூல் ரூ.155 (பழைய விலை-ரூ.130).
- பிளாக் போர்ட் ரூ.160 (பழைய விலை-ரூ.145).
- ஹண்டர் ரூ.190 (பழைய விலை-ரூ.180).
- உட்பகர் கிரஸ்ட் ரூ.250 (பழைய விலை-ரூ.240).
- உட்பகர் கிளைட் ரூ.240 (பழைய விலை-ரூ.230) ஆக உயர்த்தப்பட உள்ளது.