Chennai: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை ரூ.29 கோடி சரிவு என அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மது விற்பனை என்பது கொடிக்கட்டி பறக்கிறது. அந்த அளவிற்கு குடிமகன்கள் நிறைய உள்ளார்கள். இந்த வகையில் சொந்த ஊர் சென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டனர். இதற்காக முந்தைய நாளே, மது வகைகளை அதிகம் வாங்கினர். மேலும் தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் அரசு விடுமுறை என்பதால், டாஸ்மாக் அலுவலகங்கள் செயல்பட வில்லை.
அதில் தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் சுமார் ரூ.29 கோடி அளவுக்கு சரிவை மேற்கொண்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் தினமும் சராசரியாக சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சரிவு ஏற்பட்டதுக்கு காரணம் மாத இறுதியில் பண்டிகை வந்தது எனவும் பலர் கூறுகின்றனர். அது மட்டும் அல்லாமல் முன்பு இருந்ததை விட டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் 1500 குறைந்துள்ளது என கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது அரசுக்கு மது விற்பனை மூலம் வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.