மதுபான கடைகளில் இனி இதற்கு காசு இல்லை.. வரப்போகும் அதிரடி உத்தரவு!! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

0
333
Liquor shops no longer have money for this.. Action order to come!! The information released by the minister!!

 

 

காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை கைவிடுமாறு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து மாற்று வழி கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் அமைச்சர் முத்துச்சாமி அவர்கள் செம்படம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மது அருந்துபவர்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால் விலங்குகளும் மனிதர்களும் பாதிக்கப்படுவதால் அதை தடுக்க தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது.

அதாவது டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்கள் வாங்கும் பொழுது கூடுதலாக 10 ரூபாய் கொடுத்து பின்னர் அதே நாளில் காலி மது பாட்டிலை வாங்கிய அதே டாஸ்மாக் கடைகளில் கொடுத்து விட்டு கூடுதலாக கொடுத்த 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.

இந்த திட்டம் முதற்கட்டமாக வனம் மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் இந்த திட்டம் செயலில் இருக்கின்றது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதாவது மதுபாட்டில்கள் வாங்கிய அதே நாளில் அதே கடையில் இந்த மதுபாட்டில்களை திரும்ப கொடுத்து 10 ரூபாய் வாங்க வேண்டும் என்பதால் இதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் மது பாட்டில்கள் வாங்குபவர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றது. மேலும் இதற்காக மதுபாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஓட்டுவது போன்ற பணிகளையும் டாஸ்மாக் ஊழியர்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் திரும்பப் பெறும் மது பாட்டில்களை வைக்க டாஸ்மாக் கடைகளில் இடமும் இல்லை என்பதால் டாஸ்மாக் ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஒருபுறம் டாஸ்மாக் ஊழியர்கள் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நவம்பர் மாதத்திற்குள் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி அவர்கள் “மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கி மது அருந்திவிட்டு அத்த காலி பாட்டில்களை மது அருந்துபவர்களுக்கு வயல், சாலை, நீர் நிலைகள் போன்ற இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது.

அந்த பாதிப்புகளை தடுக்க காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. முதல் கட்டமாக 9 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதலாக பணிச்சுமை இருக்கின்றது என்று டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல் படி மதுபானங்களை தயாரித்து வழங்கும் ஆலைகளையே காலி பாட்டில்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்யலாமா அல்லது டெண்டர் கோரி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் மூலமாக நிறுவனங்களுக்கு காலி மது பாட்டில்களை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கலாமா என்று நாங்கள் ஆலோசித்து வருகின்றோம்.

ஆனால் இதில் மது பானங்களை தயாரிக்கும் மது ஆலைகளே காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதில் சிரமம் மிகவும் குறைவு என்பதால் மது ஆலைகளுக்கு டெண்டரை கொடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. நவம்பர் மாதம் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் அதற்குள் இது குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.