Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று இந்த மாவட்டத்தில் மது கடைகள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Liquor shops will not operate in this district today! Action order issued by the District Collector!

Liquor shops will not operate in this district today! Action order issued by the District Collector!

இன்று இந்த மாவட்டத்தில் மது கடைகள் இயங்காது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஈரோடு  கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஈவெரா. இவர் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். அதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதனால் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

அதற்காக 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 100 சதவீதம்  வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட மது கடைகள் செயல்பட்டு வருகின்றது.

அதனால் தேர்தலின் அமைதி பாதிக்கப்படும் என எண்ணி இன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் இரண்டாம் தேதி மட்டும் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version