Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென பால்கனியில் இருந்து குதித்த ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!

திடீரென பால்கனியில் இருந்து குதித்த  ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!! 

மூன்றாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் ஸ்பைடர் மேன் என கூறிக்கொண்டு பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர்  பாபுபூர்வா என்ற காலனியை சேர்ந்தவர் ஆனந்த் பாஜ்பாய். இவரது மகன் விராட் வயது 8. இவன் வீரேந்திர ஸ்வரூப் என்ற பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி பள்ளியில் மாணவர்கள் ஸ்பைடர் மேன் குறித்து வகுப்பில் உரையாடி உள்ளனர். ஸ்பைடர் மேன் உரையாடலை கேட்ட விராட் அந்த கதாபாத்திரம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டான். இந்த நிலையில் பால் கனிக்கு வந்த விராட் நான் ஸ்பைடர் மேன் வருகிறேன் என்று கூறிக்கொண்டே 16 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து உள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விராட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தின் போது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவன் விராட் தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 

 

Exit mobile version