பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள்; தீர்வு கிடைக்குமா?

0
138

கடந்த ஆண்டு நவம்பர் மாதம். அது ஒரு மாலை நேரம். வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் ராம் ராஜ் . அப்போது மாடு ஒன்று அவரைத் தாக்கியது.அடுத்த சில நிமிடங்களில், அவரது பேரக் குழந்தைகள் கூச்சலிட்டு, அவரை மாடு தாக்குவதை திகிலுடன் பார்த்தனர். 55 வயதான அந்த விவசாயி பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

“இது ஒரு வேதனையான மரணம். எனது மாமியார் அன்றிலிருந்து சரியாக உணவு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார்,” என்று அவரது மருமகள் அனிதா குமாரி கூறுகிறார்.இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் வழக்கமாகிவிட்டன. அங்கு பசுவதைத் தடை இருப்பதால், கால்நடைகளின் எண்ணிக்கையில் பெருக அது வழிவகுத்துள்ளது.

அம்மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதியன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், இது ஒரு தேர்தல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.இந்துக்கள் பசுவைப் புனிதமாக கருதுகின்றனர். ஆனால், சில காலம் முன்பு வரை, பல விவசாயிகள் தங்கள் பழைய மாடுகளை இறைச்சிக் கூடங்களுக்கு எடுத்துச் சென்றனர்.