Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சித் தேர்தல்! அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்!

சென்னை பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூரில் சட்டசபை உறுப்பினர் கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தாமும் அன்பரசன் பங்கெடுத்துக் கொண்டு தொடங்கி வைத்து இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியும் உரையாற்றிய அமைச்சர் தா மோ அன்பரசன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில் எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத வண்ணம் மிக சிறப்பாக பணி செய்து வருகிறது. நடைபெற இருக்கின்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி எதிர்வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரையில் கட்சிக்காரர்களை வாழ வைக்கக் கூடிய தேர்தல் ஆகவே சட்டசபை தேர்தல் போல உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெற உழைக்க வேண்டும். ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர், உள்ளிட்ட பதவிகளுக்கு திமுகவின் சார்பாக போட்டியிடும் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று உரையாற்றியிருக்கிறார் அமைச்சர் தா மோ அன்பரசன்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக செய்து வருகிறது.

அதேநேரம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version