Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: ஊருக்கே பிரியாணி விருந்து வைத்த உடன்பிறப்பால் மக்கள் நெகிழ்ச்சி..!!!

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: ஊருக்கே பிரியாணி விருந்து வைத்த உடன்பிறப்பால் மக்கள் நெகிழ்ச்சி..!!!

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஒருவர், தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்திற்காக ஊருக்கே பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுகவை சேர்ந்த பரங்கிப்பேட்டை முத்து பெருமாள் போட்டியிட்டார்.

தேர்தலுக்காக மக்களிடத்தில் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை செய்து, தேர்தலின் முடிவில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதற்காக பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியாண்டிக்குழி என்னும் கிராமத்தில் விருந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்து, அருகே இருந்த கிராம மக்களுக்கும் சேர்த்து விருந்து பரிமாறி நன்றியை தெரிவித்தார்.

இந்த விருந்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவையான பிரியாணியை ஒரு கட்டு கட்டிவிட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பினர். பிரியாணி விருந்து வைத்ததில் தான் மகிழ்ச்சி அடைந்ததாக கூறி, விருந்துக்கு வந்தவர்களில் சிலரை புதிய திமுக உறுப்பினராக சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version