Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது! அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது, திமுகவின் வழக்கு காரணமாக வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தென்காசி,திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை முறையாக செய்யாமல் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் மூன்று மாத கால இடைவெளியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது, ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து அரசு நிர்வாகமும் முடங்கிப் போயுள்ளது,. இந்த சூழ்நிலையில் வார்டு வரையறையை ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டுள்ளனர்,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது ஆனால், தற்பொழுது 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தலைமை மீதும் கட்சி மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் இவர்கள் மட்டுமே பலனை பலனை அனுபவித்து வருவதால் தங்களுக்கு உரிய அங்கீகாரமும் தங்களுடைய வளர்ச்சிக்கு உள்ளாட்சி பதவிகளில் அமர்ந்தால் மட்டுமே கட்சியை பலமாக வைத்திருக்க முடியும் என்று புலம்பி வருகின்றனர்,

மேலும் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் மூலமாக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர், இதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தயாராகி வருகிறது,

Exit mobile version