வாக்கு பெட்டிகளின் சாவியை காணவில்லை! அதிகாரிகள் ஓட்டம்! உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்?

0
144

வாக்கு பெட்டிகளின் சாவியை காணவில்லை! அதிகாரிகள் ஓட்டம்! உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் 315 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகிறுது. இதன் மூலம் 91 ஆயிரத்து 975 உள்ளாட்சி காலியிடங்கள் நிரப்பப்படும்.

கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு  கட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் மூலமாக பாசக,அதிமுக,திமுக,பாமக,நாதக போன்ற கட்சிகள் இடையே பெரும்போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய நான்கு பதவிகளுக்கான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியம் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்திலும் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியின் சாவியை காணவில்லை, இதேபோல் சேலம் மாவட்டம் செங்கவல்லியில் வாக்குப் பெட்டியில் சீல் இல்லாத காரணத்தால் வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் 73 தபால் ஓட்டுகளும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் 58 தபால் ஓட்டுகளும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 96 தபால் ஓட்டுகளும்  செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் வாக்கு எண்ணும் மையம் அருகே காட்டெருமைகள் வந்ததால் அலுவலர்கள் ஓட்டம். சில வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கையாளர்களுக்கு உணவு தரவில்லை என்பதாலும் போதிய வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் இல்லை என்ற காரணத்தாலும் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு சுற்று  முடியும் போதும் சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வரை வாக்கு எண்ணும் பணி தொடரும் என்று தேர்தல் ஆணைய வட்டாரம் அறிவித்துள்ளது.

தேர்தல் செயல்பாடுகள் அனைத்தும் சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்படுகிறது,  பாதுகாப்பிற்காக 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.