Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சி தேர்தல்!! தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல்!!

Local body elections before assembly elections!! Tamil Nadu State Election Commission Information!!

Local body elections before assembly elections!! Tamil Nadu State Election Commission Information!!

Tamil Nadu State Election Commission: தமிழ்நாட்டில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்ட மன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் தவெக கட்சி அரசியலுக்கு வந்தது தான். இதனால் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புகள் வந்துள்ளது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு புதிதாக வந்தவர்.

இவருக்கு அரசியல் என்னும் கிணறு தெரியாது என பலர் கூறினாலும், இன்னும் சிலர் விஜய் தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறுகின்றனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல்  நடைபெறுவதற்கு முன்பே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தகவல் வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதிவிக்கலாம் அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தனியாக நடந்தபடுமா இல்லை ஒட்டு மொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்து நடைபெறுமா என தேர்தல் ஆணையம் ஆலோசனையில் உள்ளது. தனியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அடுத்த ஆண்டு நடைபெறும். ஆனால் ஒட்டு மொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்து தேர்தல் நடத்தினால் சட்ட மன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தேர்தல் முறைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version