Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! 

#image_title

வருகின்ற மார்ச் 4-ஆம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! 

திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படியே  இந்த ஆண்டு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று கொண்டாடப்பட இருப்பதால் குறிப்பிட்ட 3 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர்களுள் ஐயா வைகுண்டர் சாமிகளும் ஒருவர் ஆவார். இவரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் கருதி வணங்குகின்றனர். மேலும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதி பாகுபாடுகளுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தியவர் என்ற புகழுக்குரியவர்.

வைகுண்ட சுவாமிகள் சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டி உள்ளார். எனவே ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ம் தேதி அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் மார்ச் 4ம் தேதி மாசி 20 என்பதால் அன்று வைகுண்டரின் அவதார தினமாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.

எனவே இந்த தினத்தை அய்யா வழி பக்தர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையானது கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version