Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழாயடி சண்டை அளவிற்கு மோதி கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே

ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வது திரைத்துறையில் தவிர்க்கமுடியாத ஒன்று. சமூக வலைத்தளங்களில் நடிகர் அல்லது நடிகைகளின் ரசிகர்கள் எதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டுக்கொள்வார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பதிவை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்(Hack) ஆகிவிட்டது என்று கூறினார். பிறகு சற்று நேரம் கழித்து தொழில்நுட்ப குழு உதவியுடன் கணக்கை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டதாக பூஜா ஹெக்டே தெரிவித்தார். இருந்தும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவிட்டார். அப்பதிவின் கமெண்டுகளில்(comments) சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.
அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

We support PoojaHegde என்று பூஜா ஹெக்டேவிற்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை(Hashtag) பதிவிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமந்தா இவ்வாறு பேசி இருப்பது சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர்.

மேலும் டீவிட்டரில் ஒருவர், பெண்கள் எப்போதும் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என ட்விட்டரில் பதிவிடும் சின்மயி, பூஜா தவறு செய்தாரா என தெரியாமலேயே, மற்றொரு பெண்ணை இவ்வளவு ஏளனமாக பேசுவது சரியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யார் மீது தவறு என உறுதிப்படுத்தாமல் இப்படி குழுவாக சேர்ந்து மோசமாக பேசுகிறீர்கள். பெண்ணியம் பற்றி பேசும் நீங்கள் அதில் இதை எதில் சேர்ப்பீர்கள் என ஒருவர் கேட்டுள்ளார்.
மேலும் பலரும் சமந்தா மற்றும் சின்மயி ஆகியோரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version