Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயக்கம் காட்டி வந்தன என்பது தெரிந்ததே. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், கூட்டணியும் பிளவு ஏற்படும் என்றும் இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இரண்டு பெரிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன

இந்த நிலையில் இன்று சற்று முன்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தல் தேதிகள் தந்திரமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல் தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை நடத்திய மாதிரியும் ஆயிற்று, கூட்டணி கட்சிகளை சமாளித்தது மாதிரியும் ஆயிற்று என்பதுதான் தமிழக அரசின் தந்திரமாக உள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி தொகுதிகளை பிரித்துக் கொடுப்பதில் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிரச்சனை வரும் என்பதால் அந்த தொகுதிகளுக்கான தேர்தலில் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நடவடிக்கையால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நிம்மதி அடைந்துள்ளதாக அக்கட்சிகளின் வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் விபரங்கள் இதோ:

வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6 முதல் டிசம்பர் 13 வரை
வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 16
வேட்புமனு வாபஸ் பெற கடைசி தினம்: டிசம்பர் 18
வாக்குப்பதிவு: டிசம்பர் 27 மற்றும் 30
வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2

Exit mobile version