மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்!

0
141
Lockdown again! Edappadi's emergency consultation meeting!

மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்!

கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர்.

அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை வியாபாரங்களுக்கு தடை விதித்தனர்.மேலும் அவர்கள் கூறியது,வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து இடங்களிலும் 50% சதவீதம் மட்டுமே அனுமதி,ஆட்டோக்க்களில் ஓட்டுனர் தவிர 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.அதேபோல வாடகை கார்களில் செல்பவர்கள் கார் ஓட்டுனரை தவிர 3 பேர் மட்டுமே பயனம் செய்ய அனுமதி.

இவ்வாறு பல்வேறு தளர்வுகள் கூடிய ஊரடங்கை மத்திய அரசு வெளியிட்டது.மத்திய அரசு போட்ட இந்த விதிமுறைகளில் சில விதிமுறைகளுக்கு மக்கள் போராட்டக் கொடியை நீட்டினர்.அதவாது உழவர் சந்தைகளில் சில்லறை கடைகளுக்கு தடை விதித்துள்ளது.இதனால் சில்லறை வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்படுவதோடு,அவர்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதே கேள்வி குறியாகிவிடும்.அதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் அனைவரும் அந்த தடையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

அதற்கடுத்து இன்று கொரோனா தடுப்புகள் குறித்தும்,ஊரடங்கு குறித்தும் அமைச்சர்களுடனும்,அதிகாரிகளுடனும் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்.தற்போது தேர்தல் நடந்து முடிந்திருப்பதால் தற்போதைய முழு உரிமையையும் எடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை.தேர்தல் முடிவு வரும் வரை அவர் காபந்து அரசின் முதல்வராக மட்டுமே செயல்பட முடியும்.அந்தவகையில் இந்த ஆலோசனைக்கூட்டதிற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றக்கொண்ட பிறகே இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி தேர்தல் வாக்கு பதிவு முடிந்து வெகு நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் நடக்கும் ஆலோசனைக்கூட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி மத்திய அரசிடமிருந்து சில தகவல்கள் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.அதுவும் ஊரடங்கை பற்றியதாக இருக்கும் என கூறியுள்ளனர்.அதுபற்றியும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.