Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபிறகு,செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அளிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்குநாள் குறைந்து வருகின்றது.ஆனால் முக கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசின் எச்சரிக்கையை,மக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுவரை அரசின் எச்சரிக்கையை கடைபிடிக்காத சுமார் 50 ஆயிரம் பேரிடம் 1.50 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும்,ஆரம்ப கட்டத்தில் 15 முதல் 25 சதவீதம் வரை தொற்று பாதிப்பு உறுதியாகி வந்தது தற்போது அந்த சதவீதம் 10 ஆக குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர் செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து இருந்தாலும் கிருஷ்ணகிரி,சேலம்,ஈரோடு திருப்பூர்,கோவை போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகின்றது.இதனை தடுக்கும் விதமாக மாவட்டங்களில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையின் மூலம் நோய் பரவுதல்
கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் வாட்ஸ்அப் போன்ற பொது ஊடகங்களில், மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்ற செய்தியானது வைரலாகப் பரவி வருகின்றது.மீண்டும் பொது முடக்கம் என்ற செய்தியினை மக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.மேலும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version