இந்தியா முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

0
123

இந்தியா முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 23ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கு தளர்த்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து மத்திய அரசு மாநில அரசுடனும், வல்லுநர் குழுவுடனும் ஆலோசித்து வந்தது.

இந்நிலையில் முக்கிய அறிவிப்பாக இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை. பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. எந்தெந்த பகுதிகளி எந்த மாதிரி தளர்வுகள் என்பதை விரைவில் மாநில அரசுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.