Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் தொடருமா? தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஊரடங்கை தளர்த்துவதா? ,நீட்டிப்பதா? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியார்களுடன் கருத்து கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளைக்கும் குறைந்தது 6000 நபர் என்ற அளவில் இருக்கிறது.நேற்று ஒருநாள் மட்டும் 6,988 நபர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் நேற்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,06,737. பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆகும்.மேலும் இதுவரை 1,51,055 நபர்கள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version