Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊரடங்கு நேரத்தில் 1 கோடி பணத்துடன் பைக்கில் பயணம்! போலீசார் அதிர்ச்சி!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 1 கோடி பணத்துடன் இளைஞர் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தை தடுக்க சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு வருகிற 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி மண்ணடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞரை போலீசார் மடக்கி அவரிடம் இருந்த கட்டுக்கட்டான பணத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உரிய ஆவணம் இல்லாமல் முழு ஊரடங்கு நேரத்தில் இவ்வளவு பணம் எங்கே யாருக்கு போகிறது என்று இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் மண்ணடி பவளக்காரன் தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இர்பான் என்பவர் தையப்பன் தெருவில் போய் நின்றால் இந்த பணத்தை ஒருவர் வாங்கிக் கொள்வார் என இளைஞர் நத்தர் சாகிப்பிடம் கொடுத்தனுப்பியது தெரியவந்தது. ஒட்டுமொத்தமாக 99 லட்சத்து 50 ஆயிரம் இருப்பதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இது ஹவாலா பணமா என்கிற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version