பல முன்னணி கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்குரிய விஜய் டிவி, தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனது நடிப்பின் மூலம் பட்டைய கிளப்பி வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் நடித்துள்ள லாபம் என்ற முன்னோட்ட படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தில் கதிருக்கு ஜோடியாக விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான சுனிதா களமிறங்கியுள்ளார். சுனிதா ஜோடி நம்பர்1 நிகழ்ச்சியில் டான்ஸராக பெரிதும் பிரபலமானார்.
பைலட் ஃபிலிம் என அழைக்கப்படும் முன்னோட்ட படமான இந்த “லவ் டவுன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் அதில் சுனிதா கையில் தம்முடன் கெத்தாக போஸ் கொடுப்பார்.
கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்தப் படத்தை பில்லா இயக்கியுள்ளார். கூடிய விரைவில் இந்த படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.