Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிணத்தை காணாம் சார்.. வடிவேலு பாணியில் வந்த புகாரால் அதிர்ந்த காவல்துறையினர்..!

திரைப்படம் ஒன்றில் வடிவேலு கிணற்றை காணாம் என்று காவல்துறையினரை அழைத்து வருவார் அதே போல பிணத்தை காணும் என காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்த காரைக்காலில் நடந்தேறியுள்ளது.

புதுவை மாநிலம், காரைக்காலில் காமராஜர் சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன் அந்த விடுதியில் கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரின் அறையில் இருந்த கழிவறை சரிவர இயங்காததால் விடுதி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். அவரை பக்கத்து அறையின் கழிவறையை பயன்படுத்த சொல்லியுள்ளனர்.இந்நியலியில், அவர் அறையில் இருந்த கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த அறையில் இருந்த நபரையும் காணவில்லை.

இதனை அடுத்து, அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார் என முடிவு செய்த விடுதி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸூடன் காவல்துறையினர் விரைந்து அந்த இடத்திற்கு வந்தனர். அப்போது கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் அங்கு யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனை அடுத்து விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தது, அந்த நபர் மூன்று நாட்களுக்கு முன்னே அறையை காலி செய்து சென்றுள்ளார். கழிவறையை சுத்தம் செய்யாததால் அதிலிருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. மூன்று நாட்கள் ஆகியும் விடுதியை காலி செய்ததை விடுதியின் ரெஜிஸ்டரில் பதிவாகவில்லை என கூறப்படுகிறது. இதனால், காவல்துறையினர் நிர்வாகத்தினரை எச்சரித்து அங்கிருந்து சென்றனர்.

Exit mobile version