லோக்சபா தேர்தல் 2024: வாக்கு சதவீதத்தில் முன்னேற்றம்!! மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாதக!!

0
181
Lok Sabha Election 2024: Nathaka advances in vote percentage!! Gets recognition for state party!!

லோக்சபா தேர்தல் 2024: வாக்கு சதவீதத்தில் முன்னேற்றம்!! மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாதக!!

2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த தேர்தலில் 400 இடங்களை வெல்வோம் என்ற முனைப்புடன் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜகவிற்கு லோக்சபா தேர்தல் முடிவுகள் கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் தயவில் ஆட்சியமைக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து சந்திர பாபு நாயுடுவிற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது.பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் யார் ஆட்சியமைக்க வேண்டுமானாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவு தேவை என்பதால் இவ்விருவரும் தற்பொழுது கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி

மேலும் தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக,பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.தமிழகத்தில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்றிருக்கிறது.மைக் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்கிய நாதக,2 தொகுதிகளில் 1.50 லட்சம் மற்றும் 1.63 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது.6 தொகுதிகளில் 50 ஆயிரம் மற்றும் 10 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது.தேர்தல் முடிவுகளின்படி தமிழகத்தில் திமுக,அதிமுகவிற்கு அடுத்த மூன்றாவது கட்சியாக நாதக உருவெடுத்துள்ளது.சில தொகுதிகளில் அதிமுக,பாமக,அமமுகவை பின்னுக்கு தள்ளி அதிக வாக்குகளை பெற்றுள்ள நாதக ஆறு தொகுதிகளில் 3வது இடம் பிடித்துள்ளது.இருந்த போதும் அக்கட்சி 39 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெயிட்டுள்ளது.அதில் திமுக 26.93%,
அதிமுக 20.47%,பாஜக 11.20%,காங்கிரஸ் 10.73%,தேமுதிக 2.60%,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.54% மற்றும் நோட்டா 1.06% பெற்றுள்ளது.

மேலும் லோக்சபா தேர்தலில் 8.19% வாக்குகள் பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்க 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாதக 8.19% வாக்குகள் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.