அடுத்த  திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!கமல்  232!

0
182

அனைவரும் எதிர்பார்த்தபடி உலக நாயகன் கமலஹாசனை வைத்து என்னவென்று நினைத்தாய் என்ற தலைப்பில் லோகேஷ் கனகராஜ்.தனது அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதனை அறிந்த கமல் மற்றும் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இது கமலஹாசனின் 232 வது படமாகும்.

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமலஹாசன் தற்போது 232 வது படமாக என்னவென்று நினைத்தாய் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

விஸ்வரூபம் படத்தின் பாடல் வரியை டைட்டில் டைட்டிலாக வைத்து லோகேஷ் கனகராஜ்.ஆரம்பத்திலேயே இப்படத்தை வெற்றி படமாக்கிவிட்டார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க ஒரு படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் அண்ணாத்த படம் வெளியாக தாமதமாகும் என்பதால் அதற்கு முன்பே கமலஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று இருவரும் முடிவு செய்துள்ளனராம்.

‘என்னவென்று நினைத்தாய்’படத்தின் போஸ்டரில் கமலஹாசனின் உருவத் தோற்றத்தில் ஏகப்பட்ட துப்பாக்கிகளை அடுக்கி வைத்து லோகேஷ் கனகராஜ் அனைவரையும் மிரட்டியுள்ளார்.கைதி படத்தில் ஒரே ஒரு மிஷின் கண்ணை வைத்து அனைவரையும் விரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடிகர் கமலின் தீவிர ரசிகன் என்று மேடைக்கு மேடை சொல்லி வந்த காரணத்தினால் இப்படம் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கமல் 232 ‘ஹாரர் படமாக  இருக்குமா இல்லை கமலஹாசன் மட்டும் நடிக்க போகிறாரா?’  என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளன.இதற்கு நாம் அனைவரும் படம் ரிலீசாகும் வரை காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.