நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பமானது இதனை முன்னிட்டு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த கூட்டத்தொடரில் பொதுமக்கள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எல்லா பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்த விதத்தில் அமைதியாக விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று கூறினார்.
எதிர்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று கூறியதோடு பேட்டியை முடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதன்பிறகு மக்களவை ஆரம்பித்தவுடன் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி விவசாய சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.
அதேபோல குறைந்த பட்ச ஆதார விலை சட்டப்பூர்வ உத்தரவாதம் மின்கட்டண மசோதாவைத் திரும்பப் பெறுதல் விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்டவற்றை விவாதிக்க ஒரு நோட்டீஸ் தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதீர் ரஞ்சன் சௌத்ரி வாக்கிங் போரில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சபாநாயகர் ஒருவரிடம் வேண்டுகோள் வைத்தார், இருந்தாலும் இந்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் இது தவறான உறவுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.
அதே போல ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் தேவைப்படுகிறது என்று வலியுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டார்கள். சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினார்கள். அவையில் கடுமையான அமளி உண்டானால் 12 மணி வரையில் அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவை கூடியவுடன் முன்னரே அறிவித்தபடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி சூழ்நிலையில், அது நிராகரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.