Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியிலும் சுறுசுறுப்பை இழக்காத முதலமைச்சர்!

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பல பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வது, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவது, அமைச்சரவை கூட்டங்களை கூட்டுவது, பட்ஜெட் தாக்கல் செய்வது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் .இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளில் ஐந்து நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் தன்னுடைய வேலைகளை பரபரப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதோடு பலமுறை இலண்டன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த வருடம் சிகிச்சைக்காக லண்டன் செல்ல அவர் பயிற்சிகளை மேற்கொண்ட போது நோய் தொற்று முதல் அலை தீவிரமாக இருந்ததன் காரணமாக, அந்தப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் வந்ததன் காரணமாக, தேர்தலில் மும்முரமாக இறங்கி விட்டார். ஸ்டாலின் இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்து முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து நோய் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சட்டப்பேரவை கூட்டம் ஆய்வு என்று தற்சமயம் கிராமசபை கூட்டங்கள் என பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

ஆனாலும் இவ்வளவு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் நாள்தோறும் நடை பயிற்சி சைக்கிள் பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றார் முதலமைச்சர். மருத்துவர்கள் உடைய ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு அதை கவனமாக பின்பற்றி வருகிறார்.

நோய்தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் சர்வதேச விமான பயணத்தை தவிர்த்து வந்த ஸ்டாலின் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக லண்டன் செல்ல இருப்பதாகவும், அந்த சமயத்தில் அங்கு சிகிச்சை மேற்கொண்டு திரும்ப இருப்பதாகவும், ஜூன் மாதத்திலேயே ஒரு தகவல் கசிந்தது. ஆனால் நோய் பற்றிய பயம் முற்றுபெறாத சூழ்நிலையில், முதலமைச்சர் சர்வதேச பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்கள். அதோடு ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனவரி மாதத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைப்படி நிறைவேற்ற இந்திய தேர்தல் வாக்குறுதிகள் என்று பல பணிகள் முதலமைச்சரினால் இருப்பதால் லண்டன் செல்லும் வாய்ப்பு இப்போது இல்லை என தெரிவிக்கிறார்கள் திமுக வட்டாரத்தில், ஆகவே லண்டன் மருத்துவர்களை சென்னைக்கு வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version