Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சர் என்ன வேலை பார்க்கிறார் பாருங்க!! பயத்தில் பிரபல நடிகர்!!

A sudden surprise announced by the government to the people of Tamil Nadu

A sudden surprise announced by the government to the people of Tamil Nadu

 

Amaran: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இன்று வெளியானது. அந்த படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் ஆளாக சென்று பார்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது சிவகார்த்திகேயன் முதலமைச்சர் என்ன Review சொல்வர் என்ற பயத்தில் இருந்தார்.

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக இன்று உலக அரங்கில் வெளியாகிறது. ஆனால் இந்த வருடம் தளபதி ரசிகர்கள் கூருவது என்னவென்றால், எப்போதும் தீபாவளி அன்று தளபதி விஜய் படம் வெளியாகும். இந்த வருடம் திரைப்படம் வெளியாகாமல் தளபதியே எங்களுக்காக அரசியலுக்கு வந்து விட்டார் என்று மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அமரன் படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் முதல் காட்சி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் படத்தை பார்த்து என்ன (Review) சொல்லப்போகிறார் என்று பயத்துடன் இருந்தார். அதனை தொடர்ந்து படம் முடிவு பெற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது ஒரு நல்ல படம் என்று கூறியுள்ளார். அப்போது தான் அவர் முகத்தில் சந்தோசம் தெரிந்தது. திரைப்படம் பார்கும் போது படக்குழுவினருடன் சேர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமரன் திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.

இந்த நிகழ்வின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அங்கு இருந்தனர். ஆனால் இந்த செய்தி வெளியான உடனே நெட்டிசன்கள் கூறுவது என்னவென்றால், விஜய் அரசியலுக்கு வந்ததால் நீங்கள் என்ன செய்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் ஓட்டும் தளபதிக்கே என (Comment) செய்து வருகின்றனர். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ளது என மக்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். சோனி நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அமரன் படத்தை வெளியிடுகிறது.

Exit mobile version