Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படைப்பின் அதிபதி பிரம்ம தேவருக்கு இத்தனை கோயில்களா?

இந்த உலகம் பரம்பொருள் எனப்படும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது இதில் இருக்கின்ற அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளான சிவன் விஷ்ணு பிரம்மா உள்ளிட்டோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவரை பற்றி இங்கே நாம் காணலாம்.

படைத்தல், காத்தல், அழித்தல், உள்ளிட்ட மூன்று தொழில்களில் படைப்பு தொழிலை செய்து வருபவர்தான் பிரம்மதேவர். உலக உயிர்களை படைப்பவர் தான் இவர்.உலகம் ஒவ்வொரு முறையும் அழிவை சந்திக்கும் போதும் இந்த உலகம் அழிந்து புதிதாக உருவாகும்.

அந்த சமயத்தில் பிரம்மதேவரும் புதிதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிறப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.பிரம்மதேவர் வாக்குக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதியை மணம் புரிந்து இருக்கிறார். விஷ்ணு மகாலட்சுமியை தன்னுடைய மார்பில் வைத்திருப்பது போல சரஸ்வதியை பிரம்ம தேவன் தன்னுடைய நாக்கில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

படைக்கும் தொழிலில் தனக்கு உதவியாக இருப்பதற்காக சனகர், சனத்குமாரர், சனத் சுஜாதர், சனந்தர் உள்ளிட்டோரை பிரம்மதேவர் படைத்தார். ஆனாலும் அவர்கள் தவம் மேற் கொள்வதையே பெருமையாக நினைத்தார்கள் இதன் காரணமாக, வசிஷ்டர், புலகர், புலஸ்தியர் பிருகு, தட்ச பிரஜாபதி ஆங்கிரஸ், மரீசி, அத்திரி, நாரதர் உள்ளிட்டோரை தன்னுடைய பிள்ளைகளாக பிறக்கச் செய்தார் பிரம்ம தேவர்.

பிரம்ம தேவருக்கு நான்முகன், ஆயன், கஞ்சன், விரிஞ்சி என்று பல பெயர்கள் இருக்கிறது. ராஜஸ்தான் அஜ்மீர் பகுதியில் இவருக்கு கோவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் மனைவியுடன் தனி சன்னதியில் பிரமதேவர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருச்சி அடுத்து இருக்கின்ற திக்ரம்பனூரில் பிரம்மதேவர் தன்னுடைய மனைவியுடன் காட்சி அளிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஈரோடு அருகே இருக்கின்ற கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் வன்னி மரத்தடியில் பிரம்மதேவன் அருள்பாலித்து வருகிறார்.

திருச்சி அடுத்த திருப்பட்டூரில் தனிச்சன்னதி இருக்கிறது பிரம்மதேவர் காண மிகப்பெரிய சிலை இங்கே இருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version