ரயில் மேல் ஓடும் லாரிகள்! காரணத்தோடு அமைச்சர் வெளியிட்ட வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்

0
133

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நாட்டின் சர்வதேச எல்லைகள், மாநில எல்லைகள், மாவட்டங்கள் உட்பட அனைத்தையும் மூடி போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டதால் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொதுமக்களை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாறான சூழ்நிலையை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுத்தது.

அதன்படி அத்தியாவசிய பொருட்களை லாரிகளில் ஏற்றி, அந்த லாரிகளை சரக்கு ரயில்களில் ஏற்றி அதனை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இந்த முயற்சியால் நேர விரயம் மற்றும் பல நடைமுறை சிக்கல்களை எளிதில் களைந்து பொருட்களை காலதாமதமின்றி கொண்டு செல்லலாம்.

இவ்வாறு லாரிகளில் ஏற்றப்பட்ட பொருட்கள் ரயில் மூலம் வெளியூர்களுக்கு பயணப்படுகிறது மீண்டும் அதனை இறக்கி இயற்ற வேண்டிய அவசியம் இல்லை, அந்த லாரிகளை மூலம் உரிய இடத்திற்கு எளிதில் கொண்டு செல்லப்படும். இந்த காரணங்களை குறிப்பிட்டு அதன் காணொளியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.