Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவையாறு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி! 6 பேர் படுகாயம்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கின்ற ஆசனூர் மணல் குவாரியில் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது இந்த நிலையில் நடுக்கடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரியின் ஸ்டியரிங் உடைந்து இருக்கிறது.

ஆகவே அந்த லாரி ஓட்டுநர் வீரமணியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு அந்த பகுதியில் இருந்த ஜெராக்ஸ் கடை மற்றும் நகை கடைகள் உள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் வீரமணி, சாலையில் நடந்து சென்ற பெண் உள்ளிட்ட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

விபத்தின் காரணமாக தஞ்சாவூர், அரியலூர் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு நடுவில் விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version