உங்கள் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க இந்த பானம் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)சுக்கு – ஒரு துண்டு
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)தேன் – ஒரு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் கருஞ்சீரகம்,சுக்கு,சீரகம் மற்றும் தேனை சொல்லிய அளவுபடி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து கருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு இதனை ஆறவைத்து உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அடுத்து ஒரு துண்டு சுக்கை நெருப்பில் வாட்டி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
பிறகு அரைத்த கருஞ்சீரகம் மற்றும் சீரக கலவையை சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் மிக்ஸ் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 06:
அதன் பிறகு அரைத்த சுக்குத் தூளை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த பானம் மிதமான தீயில் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
ஸ்டெப் 07:
அடுத்து இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேனை அதில் மிக்ஸ் செய்து காலை வேளையில் பருகினால் உடல் எடை குறையும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இந்த ஆப்பிள் சீடர் வினிகர் பானம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை – ஒன்று
2)தண்ணீர் – 150 மில்லி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இரண்டு நிமிடங்கள் கழித்து தண்ணீரை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை இந்த சூடான தண்ணீரில் பிழிந்து காலை நேரத்தில் பருகி வந்தால் உடலில் கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.