உங்களில் பலர் உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்.இன்று பல ஆபத்தான நோய் பாதிப்புகள் சாதாரணமாக ஏற்பட முக்கிய காரணம் உடல் பருமன்.இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
கடுமையான உடற்பயிற்சி,டயட் பாலோ செய்யும் நபர்கள் சில விஷயங்களை பின்பற்றினால் எளிதில் உடல் எடை குறைந்துவிடும்.
ஒரே மாதத்தில் உடல் எடையை குறிக்க பின்பற்ற வேண்டியவை:
1)எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
2)வெண்ணெய்,நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
3)எந்த உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும்.ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
4)நேரம் கடந்தும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கீரை,உலர் விதைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
5)அரிசி உணவுகளை மூன்று வேளையும் சாப்பிடுவதை தவிர்த்து சிறு தானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6)நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.
7)மது மற்றும் புகை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.மைதா உணவுகள்,சீஸ்,ஜங்க் புட்,பாஸ்ட்புட் போன்றவற்றை சாப்பிடவே கூடாது.
8)தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி,ஜாகிங் செய்ய வேண்டும்.இந்த வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்துவிடும்.