முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்
சமீபகாலமாக எல்லை கடந்த முகநூல் காதல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் அமீனா மற்றும் அர்பாஸ் கான் என்பவர்களுடைய காதல் திருமணம் தான் தற்பொழுது இரு நாடுகளுக்கிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவின் ஜோத்பூரை சேர்ந்த அர்பாஸ் கான் என்ற இளைஞர்,பாகிஸ்தான் நாட்டின் கராச்சியை சேர்ந்த அமீனா என்ற பெண்ணை காதலித்து அவரை ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி நாளடைவில் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.
பின்னர் இருவரும் தங்களின் காதல் பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து
இருவரின் பெற்றோர்களும் அமீனா மற்றும் அர்பாஸ் கான் காதலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம் என்று இருவீட்டாரும் முடிவெடுத்து அதற்கான வேலைகளை ஆரமித்துள்ளனர்.இதனை தொடர்ந்து அமீனா இந்திய விசா பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.ஆனால் விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமணம் தடை பட்டு விடக்கூடாதென்று நினைத்த அவர்கள் ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.இதையடுத்து ஆன்லைன் வழியாக திருமணத்திற்கான அனைத்து சடங்குகளையும் முறையாக மேற்கொண்டு உறவினர்கள் முன்னிலையில் கடந்த புதன்கிழமை அன்று திருமணம் செய்து கொண்டனர்.மேலும் அமீனாவுக்கு இந்திய விசா கிடைத்த பிறகு இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று அர்பாஸ் கான் கூறியுள்ளார்.
இந்நிலையில் இவர்களின் நாடு கடந்த காதல் மற்றும் ஆன்லைன் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.