Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வலைத்தள பக்கத்தில் வலை விரித்த கார் ஓட்டுநர்! சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை!

கர்நாடக மாநிலம் மைசூரில் 17 வயது சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கிய கார் ஓட்டுநர் ஒருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள் காவல்துறையினர். அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக காவல் துறை சார்பாக அநேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அந்த குற்ற சம்பவங்கள் குறைந்ததாக தெரியவில்லை.

அந்த வகையில், கர்நாடக மாநிலத்தை ஒட்டி இருக்கின்ற ஓசூரில் 17 வயது சிறுமி ஒருவரை காதல் வலை வீசி சீரழித்து இருக்கிறார் ஒரு நபர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கின்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் ஓசூர் அரசநத்தம் பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுனர் டேனியல் என்ற 22 வயது இளைஞருக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு இருக்கிறது . அதன் பிறகு அந்த நட்பானது காதலாக மாறி இருக்கிறது நாட்கள் செல்ல செல்ல இருவரும் அனேக நேரங்களில் தனிமையில் சந்தித்து பேசி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில், டானியல் அந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக தெரிவித்து அந்த 17 வயது சிறுமியை பல இடங்களுக்கு கூட்டி சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆகி இருக்கின்றார். இதனையடுத்து சிறுமியின் உடலில் ஒரு சில மாற்றம் ஏற்பட அதனை கவனித்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை அழைத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது .இதன் காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெற்றோர் இது தொடர்பாக ஓசூர் மாநகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து டேனியலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Exit mobile version