Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவரது மகன் வெங்கடேசன்.23 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த,திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்னும் பெண்ணும்,வெங்கடேசனும்,பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தங்களின் காதலை இருவர் வீட்டிலும் சொல்லவே,இரண்டு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன் வெங்கடேசன் மற்றும் ஸ்டெல்லா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

ஸ்டெல்லா அவ்வப்போது கடும் தலைவலி பிரச்சினையால் சில காலங்களாக அவதியுற்று வந்துள்ளார்.இதற்காக அவர்கள் பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பலன் கிடைக்கவில்லை.அதீத தலை வலியின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்டெல்லா,நேற்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்டெல்லா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல் துறையினருக்கு வெங்கடேசன் மற்றும் அவரது பெற்றோர்கள் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்டெல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version