Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

சென்னையில் உள்ள இளைஞருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் கும்பகோணத்தை சேர்ந்த சிறுமி மீது காதல் வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் ஓய்வு நேரத்தில் பப்ஜி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த 17 ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றுள்ளனர். சிறுமியை  காணாமல் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சிறுமியிடம் உள்ள செல்போன் எண்ணை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என சைபர் கிரைம் மூலமாக போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த எண் சென்னையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சென்னை சென்று அந்த பெண்ணையும், அவரது காதலனையும் கும்பகோணம் அழைத்து வந்தனர். அந்த பெண்ணின் பெற்றோரையும் காவல் நிலையம் வரவழைத்தனர். அப்போது நடந்த விசாரணையில் பெண்ணின் வயது 17 என்பது உறுதியானது. மேலும் பெண்ணின் பெற்றோர், பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு போலீசாரிடம் கேட்டனர்.

அந்த பெண்ணும் பெற்றோருடன் செல்வதற்கு சம்மதம் சொல்லவே, அந்த பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 17 வயது பெண்ணை கடத்தி சென்றதால் கவினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version