Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலியை ஏமாற்ற நினைத்த காதலன்! காவல் நிலையத்தில் வைத்து டும் டும் டும்..!!

காதலியை ஏமாற்ற நினைத்த காதலன்! காவல் நிலையத்தில் வைத்து டும் டும் டும்..!!

நான்கு வருடமாக காதலித்து விட்டு அழகாக இல்லை என்ற காரணத்தால் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், பொழிச்சலூர் அருகேயுள்ள அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே சமீபகாலமாக பிரச்சினை ஏற்பட்டு காதலில் விரிசல் உண்டாகியது. ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் தனது காதலி கவிதாவை வேண்டாம் என்று புறக்கணித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கவிதா, என்னுடன் குடும்பம் நடத்துவது போல் வாழ்ந்துவிட்டு என்னை வேண்டாம் என்கிறாயா, என்று கோபத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை அடிப்படையாக கொண்டு வெங்கடேஷை தேடி காவலர்கள் விரைந்தனர். இதை முன்கூட்டியே அறிந்த வெங்கடேஷ் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் லாவகமாக அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், கவிதா அழகாக இல்லை என்பதால் அவரை புறக்கணித்தேன் என்று கூறினார்.
பின்னர், ஏற்கனவே வெங்கடேஷ் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும், இதனால் கவிதா விஷம் குடித்ததாகவும் முழு விசாரணையில் தெரியவந்தது.

இதற்குமேல் விட்டால் வெங்கடேஷ் தலைமறைவாக வாய்ப்புள்ளது என்று எண்ணிய போலீசார், காவல் நிலையத்திலேயே வைத்து தாலிகட்ட கட்ட சொல்லி டும் டும் டும் முடித்து வைத்தனர். போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகார்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். சமீப காலமாக காதல் என்கிற பெயரில் ஏமாற்று வேலை அதிகம் நடப்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version