நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி!

Photo of author

By Jayachandiran

நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி!

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா இடங்கள், பீச், மால்கள், தியேட்டர்களில் காதலர்களின் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் காதல் பரிசுகளை வாங்கி அன்பை பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் வேறொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவரை விரட்டிச் சென்று மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலிக்கும் மனைவிக்கும் இடையே மாட்டிக் கொண்டு எந்த பக்கம் தப்பிப்பது என தெரியாமல் அந்த இளைஞர் விழிபிதுங்கி நின்றார்.

கணவனின் துரோக செயலை பொறுக்க முடியாத மனைவி, சாலையிலேயே வெளுத்து வாங்கியுள்ளார். சண்டை அதிகரிக்கவே அங்கு லேசான கூட்டம் கூடியது. இச்சம்பவத்தை அறிந்த போக்குவரத்து போலீசார் பிரச்சினை நடக்கும் பகுதிக்கு உடனடியாக வந்து சிக்கலை சரிசெய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் அப்பெண் பேசியதாவது: எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். பின்னர், தனது கணவர் மனம்மாறி தவறான பாதையில் போவதாக அப்பெண் குற்றம் சாட்டினார். இதனையடுத்து போலீசார் கணவனிடம் விசாரிக்கையில், கணவன் கூறியதாவது : இன்று காதலர் தினம் என்பதால் எனது காதலியை வெளியே கூட்டிச் சென்றேன் என்று கூறினார். இதைக் கேட்டதும் அவரின் மனைவியிடம் அதிக கோபம் வெளிப்பட்டது.

மேலும், பிரச்சினை எளிதில் தீர்க்க முடியாத காரணத்தால் கணவன், மனைவி, காதலி உட்பட மூன்று பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இருக்கும் போதே காதலியுடன் ஊர் சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version