Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரியாணியும் பூவும் வாங்கி வெச்சிருக்கேன் எப்போ வரட்டும்! காதலர்கள் ஒரே அறையில்! அப்புறம்?

குமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்கும் செவிலியர் ஒருவர் காதலனுடன் மருத்துவரின் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரொனா காலத்தில் மக்கள் வெளியே செல்லவே பயபடும் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்,பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

குலசேகரத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரியும் செவிலியர் இவர் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே ஆரல்வாய்மொழியில் உள்ள 108 ஆம்புலன்சில் செவிலியர் பணி செய்து கொண்டிருந்த போது அதே ஆம்புலன்ஸ் வண்டியின் டிரைவர் பாபுவை காதலித்து வந்துள்ளார். ஒரே ஆம்புலன்சில் இருவரும் பணிபுரிந்து வந்ததால் இருவரும் நெருக்கமாகி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் செவிலியர்க்கு பணி மாற்றம் செய்து குலசேகரம் பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் தொலைபேசியில் தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இருவரும் தனிமையில் இருக்க நினைத்த அந்த பெண் பாபுவை குலசேகரம் மருத்துவமனைக்கு அழைத்துளார்.

காதலன் பாபுவும் அந்த பெண்ணிற்கு பிரியாணி மற்றும் தலையில் வைக்க பூவோடு மருத்துவமனைக்கு வந்துள்ளார். மதியம் நேரம் என்பதால் மருத்துவமனையில் மருத்துவரும் இல்லை. நோயாளிகளும் யாரும் வரவில்லை.

மருத்துவர்கள் அறையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த அறையின் வெளியில் பூட்டிவிட்டு, பின்னர் குலசேகரம் காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு மருத்துவனையில் திருடன் நுழைந்து விட்டான் என்று தகவல் தந்து வரவழைத்து உள்ளனர்.

அங்கு வந்து பார்த்த போலீசார் அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின் இருவரையும் அழைத்து பாபுவை போலீசார் எச்சரித்து கண்டித்து அனுப்பி இருக்கிறார்கள். மேலும் அந்த செவிலியர் மீது நடவடிக்கைக எடுக்க போலீசார் பரிந்துறை செய்ததாக சொல்லபடுகிறது.

 

 

Exit mobile version