Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டில் கிடுகிடுவென குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நேற்று 5,910 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பு 4,417 ஆக குறைந்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அழைத்திருக்கின்ற புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,417 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த நோய் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,66,862 என குறைந்திருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் 6,032 பேர் இந்த நோய் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டதால் இந்த நோய் தொற்று பாதிப்பு விருந்து விடுபட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,38,86,496 என பதிவானது.

தற்போது வரையில் 52,336 பேர் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள். அதோடு இந்த நோய் தொற்று காரணமாக, 22 பேர் பலியானதால், பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,28,030 என அதிகரித்திருக்கிறது.

நாட்டில் இதுவரையில் 213.72 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version