வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா?
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தற்போது தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது.மேலும் மயிலாடுதுறை சீர்காழியில் 122ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஆறு செ.மீ மழை பதிவாகி சீர்காழி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.மழை நீர் சீர்ரமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது.
அதனையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.அதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு ஆந்திரா ,வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் பெரம்பலூர் ,நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று மற்றும் நாளை 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.