Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் வெளியிட்ட தகவல்! 

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு கரையை கடந்தது.

வங்கக் கடலில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று  (1.2.2023) தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கே தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும்,  காரைக்காலில் இருந்து தென்கிழக்கு 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து இன்று 2.2.2023 அதிகாலையில் மேற்கு – தென்மேற்கு,  திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்படியே தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று அதிகாலையில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த தகவலில் இலங்கையின் மட்டக்களப்பு திரிகோணமலைக்கு இடையே அதிகாலை  3:30 மணி முதல் 4:30 மணிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version