Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி வாட்சாப் மூலம் சமயல் சிலிண்டர் புக் செய்யலாம் – வழிமுறை என்ன தெரியுமா?

மக்களுக்கு எளிதாக் சேவை செய்யும் வகையில் எண்ணை நிறுவனங்கள் பல வசதிகளை செய்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன், IVR உட்பட பல்வேறு வழிகளில் மக்கள் சமயல் சிலிண்டர்கள் முன் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையின் மூலம் இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணிலிருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலிண்டர் வினியோகம் செய்தவுடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்பும். அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றி இண்டேன் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்

Exit mobile version