குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! ஜனவரி-1 முதல் சிலிண்டர்களின் விலை குறையப்போகிறதா ?

0
147

வரப்போகும் புத்தாண்டில் இல்லத்தரசிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது ஜனவரி 1முதல் சமையல் எரிவாயுவின் விலை குறையலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலையில் பெரியளவு குறைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் அரசு மக்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1053 ஆகவுள்ளது, அதேபோல கொல்கத்தாவில் ரூ.1079, மும்பையில் ரூ.1052.50, சென்னையில் ரூ.1068, பாட்னாவில் ரூ.1151 மற்றும் லக்னோவில் ரூ.1090 ஆகவுள்ளது.

ஜூலை மாதம் வரை அரசு சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் எதையும் செய்யவில்லை, அதேசமயம் இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் வீட்டு சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.150 வரை உயர்த்தியது. அதுவே கடந்த ஆண்டு அக்டோபர் 2021-ல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $ 85 ஆக இருந்தபோது சமையல் எரிவாயு விலை ரூ. 899 ஆக இருந்தது. தற்போது ​​கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு $ 83 ஆக உள்ளது மற்றும் இந்தியாவில் பேரலுக்கு $77 ஆகவுள்ளது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு ஏப்ரல் 1, 2023 அன்று முதல் ரூ.500க்கு சிலிண்டர்கள் தருவதாக உறுதியளித்துள்ளது, ஜெய்ப்பூரில் தற்போது சிலிண்டரின் விலை ரூ.1056 ஆகவுள்ளது. ராஜஸ்தான் அரசின் இந்த முடிவால் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது, இத காரணமாக அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு விலையில் மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.