Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி ரேஷன் கடைகளின் மூலம் சிலிண்டர் விற்பனை-மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாயை தாண்டியுள்ளது.

இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த சிறிய கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லரை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டியுள்ளனர். மேலும், இந்த திட்டத்தில் ஆர்வம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் அதற்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பேசிய சுதான்ஷூ பாண்டே ரேஷன் கடைகளில் நிதி சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கு இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், ரேஷன் கடைகள் மூலம் நிதி சேவைகளை வழங்கும் திட்டத்தை பாராட்டிய நிதி சேவைகள் துறையின் பிரதிநிதிகள் ரேஷன் விலைக்கடை டீலர்களுக்கு, முத்ரா கடன்களை மூலதன பெருக்கத்திற்காக நீட்டித்து தேவையான ஆதரவு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகள், மாநிலங்கள்-யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் லிட்., இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version