கவிஞர் வாலி அவர்கள் சினிமா துறையில் பாடலாசிரியராக அறிமுகமான சமயத்தில் தான், இதற்கு முன்னர் எழுதிய பாடல்களை பல இசையமைப்பாளர்களிடம் கொண்டு சென்று தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இந்த பாடல் வரிகள் நன்றாக இல்லை என்று எம் எஸ் விஸ்வநாதன் உட்பட பல இசையமைப்பாளர்கள் நிராகரித்து விட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
கவிஞர் வாலி அவர்கள் 5 தலைமுறையாக சினிமா துறையில் கவிஞராக தன்னுடைய பணியை தொடர்ந்தார் என்பது பெருமைமிக்க விஷயமாக இன்றளவும் வியந்து பார்க்கப்படுகிறது.
சினிமா துறையை பொறுத்தவரையில் ஆரம்ப காலகட்டங்களில் அனைவருக்கும் ஏற்படக்கூடிய நிகழ்வு தான் இவருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது வாலி என்ற பெயரை கேட்டவுடன் அவருடைய பாடல் வரிகள் நம் மனதில் தோன்றுவது போல், அன்றைய நிலை அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்பதே உண்மை.
இவர் சினிமா துறையில் அறிமுகமான காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவிஞராக சினிமா துறையின் உச்சத்தில் இருந்தார். அப்பொழுது புதிய பாடல் ஆசிரியருக்கு பெரிதாக வரவேற்புகள் கொடுக்கப்படவில்லை.
அச்சமயம், எம்ஜிஆர் மற்றும் கண்ணதாசன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய படத்திற்கு பாடல் எழுத கவிஞர் வாலி அவர்களை அழைத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த இடைவேளையில் கவிஞர் வாலியிடம் சென்ற எம்.ஜி.ஆர் அவர்கள் நீங்கள் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு எழுதிய பாடல்கள் உள்ளனவா என்று கேட்டுள்ளார்.
உடனே வாலி அவர்களும், நான் இரண்டு குயர் நோட்டு புத்தகம் முழுவதும் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன் என்று கூறி அதனை எம்ஜிஆர் இடம் கொடுத்துள்ளார். அந்த நோட்டினை வாங்கி பார்த்த எம் ஜி ஆர் அவர்களும் அதிலிருந்து ஒரு பாடலை தேர்வு செய்து அந்த பாடலை இந்த படத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறும் பொழுது, அதைக் கேட்ட வாலி அவர்கள் இந்தப் பாடலை தான் அனைத்து இசையமைப்பாளர்களும் படங்களில் இது ஓடாது என்று சொல்லி நிராகரித்து விட்டனர். இன்று எம்ஜிஆர் இடம் கூறியுள்ளார்.
எனினும் அதனை எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ளாமல், தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
மேலும், அந்த பாடல் சினிமா துறையிலும் இசை துறையிலும் மிகப்பெரிய வெற்றியை கண்டது குறிப்பிடத்தக்கது. வாலியின் பாடல் வரிகளை டிஎம்எஸ் குரலில் பாட வைத்த பாடல் தான் “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்” என்ற பாடல்.
இந்த பாடல் உருவான காலம் முதல் இன்றளவும் எம்ஜிஆரின் ரசிகர்களின் மனதில் மட்டுமின்றி இசை பிரியர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்பது யாராலும் மறக்க முடியாத உண்மையாகவே விளங்குகிறது.