Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!..

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!..

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அரசு நடத்தி வருகிறது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில்லுள்ள அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகம் உள்ள முதலீடுகளை தன்வசம் ஈர்த்துவந்தார்.

திமுக அரசு வந்து ஓராண்டுநிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை ரூ.94,925 கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளது.இதன்மூலம் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.பின்னர் பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை  நேரில் சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கயிருக்கிறது. இந்த மாநாட்டில் 60 பரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களால் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு கிடைக்கும் என்றும் இதன்மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி கட்டாயம் செய்யப்படுவதாகவும் தொழில்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.இதனையொட்டி பணிகள் நிறைவடைந்துள்ள 12 திட்டங்கள் அனைத்தையும் தொடங்கி வைக்கிறார்.மேலும் இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தொழில்துறை செயலாளர்  ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்ற அவர்கள் சில அறிவுரைகளை கூறினார்கள்.

Exit mobile version