சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் அபி, ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் காய் நகர்த்தி வருகின்றனர். அதே நேரம் ஈரோட்டில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தினர்.
முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் மாவட்ட துணை செயலர் செந்தில்குமார் சீட் பெற முயற்சி செய்கின்றார். மேலும் அவர் பண பலம் என்பதாலும் பண மழை பெய்யும் என்பதாலும் களமிறங்க காத்திருக்கின்றனர். முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் மகனின் திருமணம் சமீபத்தில் ஈரோட்டில் நடந்தது அதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றதால் அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மாவட்ட திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
காங்கிரஸில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டினாலும் இடைத்தேர்தல் ஃபார்முலாவை செயல்படுத்தும் அளவிற்கு பணம் படைத்தவர்கள் இல்லை. அரசுக்கு செலவு அமைச்சர்களுக்கும் விருப்பம் இல்லை அதனால் தொகுதியை விட்டுக் கொடுக்கும்படி ராகுல் இடம் பேச திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்சி தயங்கினால் அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி தருவதாக சொல்லி வழிக்கு கொண்டு வரும் திட்டமும் திமுகவுடன் இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது 2025 ஜூலையில் திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்கள் வில்சன் சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக எம்பி சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்கால முடிகிறது. இந்த ஆறு இடங்களுக்கும் ஜூன் மாதத்தில் தேர்தல் நடக்கும். திமுக சார்பில் மக்கள் நீதி மையம் தலைவர் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கே விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என கட்சி வட்டாரங்கள் கூறினர். ஈரோடு கிழக்க தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து அதிமுக விரைவில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளது.